Tuesday, 21 April 2020

கொரானாவுக்கு பிறகு

..
வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும்  தயார் செய்து கொள்வது நன்று 
..
*கொரானாவுக்கு பிறகு*

இந்த செய்தியில் இருக்கும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டது இல்லை. திரு. ஜெயரஞ்சன், திரு. ஆனந்த் வெங்கடேஷ், திரு. அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார அறிஞர்களின் பேட்டிகள் அவர்கள் பொது வெளியில் அளித்த சில புள்ளி விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் இது போன்ற செய்திகளை பார்வேர்டு செய்ய மாட்டார்கள். பொய் செய்திகளையும், பரபரப்பான வதந்திகளையுமே பரப்புவார்கள் என்று பொது வெளியில் அறியப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு முறையாவது நமக்கு தெரிந்ததை சொல்லிவிடுவது கடமை.

உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகக் கடுமையாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல கம்பெனிகள், அரசாங்கங்கள், தங்களது ஊழியர்களுக்கு  சம்பளம் போடக்கூட பணம் இல்லாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கணிக்கப்படும் வானிலை வேண்டுமானால் தவறாகப் போகலாம்.  ஆனால் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலும் மாறுவதில்லை. அதன்படி நடக்கப் போகும் சங்கதிகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

🚗 துபாய், அபுதாபி உள்ளிட்ட UAE ல் பணியாற்றும் 17,50,000 இந்தியர்களில் ஏறத்தாழ 30% முதல் 40% பேர் வேலை இழப்பது உறுதி. அதாவது கிட்டத்தட்ட 6 இலட்சம் பேர் - யு.ஏ.ஈ. ல் மட்டுமே வேலை இழப்பார்கள்.

🚔 சவூதியில் பணியாற்றும் 15,40,000 பேரில் வேலை இழப்பவர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேர்.

🚌 இவ்வாறு குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைனில் வேலை இழக்க உள்ளார்கள்.

💰 எனது கணவர் அல்லது மகன்,  ஐரோப்பா அல்லது அமெரிக்காவில், ஐடி வேலையில்  இருக்கிறார்கள் பிரச்சினை எதுவும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். முதலில் வேலை இழக்கப் போவதும் அல்லது அதிரடியாக சம்பளக் குறைப்புக்கு ஆளாகப் போவதும் இவர்கள்தான். அதிக பாவம் இவர்கள்தான்.

அதனால் மேற்கண்ட இவர்கள் இந்த இன்னலை சந்திக்க தயாராக வேண்டும். 

💪 வேலை இழந்து வருபவர்களில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டும் குறைந்த பட்சம் கிட்டத்தட்ட 3,00,000 பேர் வருவார்கள். இது 5,00,000 பேர் வரை ஆவதற்கும் வாயய்ப்புகள் உள்ளது.

சரி, இவர்கள் இனி என்ன செய்யலாம்?
கஷ்டம்தான்!!! முதலில் பின்பற்ற வேண்டியது சிக்கனம்தான். 

1. வருடத்திற்கு லட்சங்கள் பீஸ் வாங்கும் பள்ளிகளை தவிர்த்து விட்டு நார்மலான பள்ளிகளில் அல்லது அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கலாம். காரணம் பெரும்பாலான பசங்கள் தந்தையரின் நேரடி கண்கானிப்பு இல்லாத நிலையில் தாய்மார்களிடம் தங்கள் விரும்பியதை வாங்கிக் கேட்டு, படிப்பில் கவனம் இல்லாமல் பல லட்சங்கள் செலவழித்து கடைசியில் B.Com அல்லது BBA மட்டுமே படிக்கிறார்கள். ஒரு சிலர் விருப்பம் இல்லாமல் கடமைக்கு BE படிக்கிறார்கள். ஆக செலவு செய்வது வேஸ்ட். இதே படிப்பை ஒரு பைசா செலவில்லாமலே பல லட்சம் பேர் படிக்கிறார்கள். 

2. அம்மாவுக்கு சுகர், மூட்டுவலிக்கு மருத்துவம் பார்க்க சுற்றுலாவுக்கு போவது போல கார் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கொண்டு  போய், நம்ம டாக்டர் சொல்லிட்டார் என்று எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை அள்ளி வீசி தேவை இல்லாத டெஸ்டுகள் எல்லாம் எடுத்து, பை நிறைய மருந்துகளும், பைல் நிறைய டெஸ்ட் ரிப்போர்டுகளும் எடுத்துக் கொண்டு, ஜவுளிக்கடைக்குள் புகுந்து, தேவையோ இல்லையோ ஒரு புது டிசைன் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. பேக்கரிக்குள் புகுந்து கண்டதையும் வாங்குவதையும், சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கண்டதை எல்லாம் வாரி கூடையில் போடுவதை நிறுத்த வேண்டும்.

4. நாள் வாடகைக்கு கார் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

5. கார் வைத்திருப்பவர்கள் டிரைவரை வேலைக்கு அமர்த்தி சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் 

6. எக்காரணம் கொண்டும் பழைய நகையை கொடுத்து புது நகை வாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பக் கூடாது. இது ஆக முட்டாள்தனமான முடிவு. காரணம் பத்து பவுன் நகையை மாற்றினால் அது, இது என்று பிடித்து கையில் ஏழரை பவுன்தான் கொடுப்பார்கள். கடைக்காரன் பணக்காரனாகவும் நீங்கள் நஷ்டவாளிகளாக வும் ஆகிவிடுவீர்கள். 

7. பசங்க பைக் கேட்கிறார்கள் என்று எந்தக் காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதற்கு மாத தவணையும், பெட்ரோலும் நீங்கள்தான் போட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்

8. அதிக செலவு பிடிக்கும் விருந்து கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

9. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், குதிரை, யானை, பேண்ட் வாத்தியம், வெடி இல்லாமல் சிம்பிளாக நடத்துங்கள்.

10. வரதட்சணை கேட்டால் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை பாருங்கள்.

11. கார் எடுத்துக் கொண்டு சுற்றுலா போகலாம் என்ற நினைப்பே வரக்கூடாது. ஒன்லி பஸ், டிரைன் சுற்றுலாதான் 

12. வெளிநாடுகளில் சம்பாதித்து விட்டு வேலை இழந்து ஊர் திரும்பும் சிலரிடம் நல்ல சேமிப்பு இருக்கலாம். அதை அறிந்து சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் முள்ளு செடியும், கள்ளி செடியும் வளர்ந்த வனாந்திரத்தை காட்டி இப்போது இதை வாங்கிப் போடுங்கள், இன்னும் இரண்டு வருடத்தில் டபுள் விலைக்கு போகும் என்று ரீல் விடுவார்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். ஐந்து வருடம் ஆனாலும் போட்ட காசில் பாதி கூடக் கிடைக்காது 

13. உடம்பு சரியில்லாவிட்டால் முதலில் ஒரு ஜெனரல் டாக்டரிடம் காட்டுங்கள். அவரிடம் உங்களுக்கு நோய்களை பற்றி அதிகம் தெரிந்ததாக காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அதிக விபரமாக பேசுபவர்கள்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடம் அனுப்பப்பட்டு அனைத்து டெஸ்டுகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள். அப்புறம் பணம் போய் விட்டதே என்று வருத்தப்படுவீர்கள் 

14. மச்சான் ஒரு நல்ல பிஸினஸ் இருக்கிறது போடுங்க காசை அள்ளலாம் என்று சில மச்சினன்மார்கள் சுற்றி வருவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் செல்போன் கடை மீது காதல் இருக்கும். ஆனால் அந்த காதல் இப்போதைய நிலையில் உங்களை பஞ்சர் ஆக்கிவிடும்

15. மச்சான் அஞ்சு ரூபாய் சப்பாத்தி, அதுக்குள்ள பத்து ரூபாய் சிக்கன், அஞ்சு ரூபாய் காய்கறியும், ஒரு ரூபாய்க்கு சாஸ் ம் ஊற்றி நூறு ரூபாய் க்கு விற்கலாம், ஒரு ஷாவர்மா விற்றால் 80 ரூபாய் லாபம், ஒரு நாளைக்கு 100 விற்கலாம், ஒரு பர்கர் விற்றால் 50 ரூபாய் லாபம். தினமும் நூறு பர்கர் விற்கலாம் என்று சிலர் தூண்டுவார்கள். அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்வது உங்களுக்கு லாபம். இல்லாவிட்டால் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத உங்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடை போட்டு பத்து நாள் பந்தாவாக பிஸினஸ் செய்து விட்டு, பிறகு வியாபாரம் டல்லடித்ததும் புரோட்டாக் கடை, பிரியாணி கடை என்று அவதாரம் எடுப்பதும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இனி வரும் ஐந்தாண்டுகள் பணப்புழக்கம் குறைவதால் ஆடம்பர ஹோட்டலுக்கு வருவது நின்று அத்தியாவசியமான, விலை குறைவான  உணவுகளையே மக்கள் வாங்குவார்கள். 

16. பிக்ஸட் டெபாசிட்டுகளை ஒரே பேங்கில் வைக்காமல் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்

17. அவசியம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். காசு கொஞ்சம் கூடுதலாக செலவானாலும் நமக்கு பிறகு நமது குடும்பத்தினர் பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கவலை நீங்கி விடும். 

18. பிள்ளைகளை Neet, Jee போன்ற பரீட்சைகள் எழுதவும் Professional கோர்ஸ் படிக்கவும் தயார் படுத்துங்கள்

19. அரசாங்கத்தின் கடைசி நிலையில் இருக்கும் ஊழியருக்கு இருக்கும் பணி பாதுகாப்பு, பணிக்கொடை போன்ற எதுவுமே உங்களுக்கு இல்லை அதனால் பிள்ளைகளை போட்டித் தேர்வுகளுக்கு பழக்கி அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரமாக்க முயற்சி செய்யுங்கள்.

20. அவசரம் வேண்டாம் மூன்று மாதம் சுற்றிலும் உள்ளதை கவனித்து பாருங்கள். எதில் நல்ல வாய்ப்புகளும் எதிர்காலமும் உள்ளது என்று புரியும். அதன்படி செயலாற்றுங்கள்.

21. இனி அதிக நாட்கள் நீங்கள் ஊரிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் பல இயக்கத்தவர்களும் உங்களை இழுப்பார்கள். நாங்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கதை அளப்பார்கள். பிடி கொடுக்காதீர்கள். முடிந்தவரை பெரிய அளவுக்கு அவர்களுக்கு பணம் அன்பளிப்பு செய்யாதீர்கள். நூறு இரு நூறுகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

22. எந்தக் காரணம் கொண்டும் பிற சமுதாயத்தினரோடு சச்சரவுகள் செய்வதோ, விவாதங்கள் செய்வதோ கண்டிப்பாக கூடாது. அனைவருடனும் நல்ல இணக்கத்தோடு வாழுங்கள்

பெண்களே இனி ஒரு குடும்பம் உருப்படுவதும், வீணாகப் போவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. பண வரவு இல்லாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். கணவரை குத்திக் காட்டுவீர்கள். கணவர் பிரிந்திருந்த நேரங்களில் நீங்களாகவே எல்லா முடிவும் எடுத்திருப்பீர்கள். இனி அது முடியாது அதனால் ஒரு இயலாமை ஏற்படும்.
இதெல்லாம் உங்களுக்கு மன அழுத்தம் தரும். ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொண்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த அழுத்தமும் வராது.

கவலைப்படாதீர்கள். 
இதுவும் கடந்து போகும்..


From..முத்துக்குமார்..

Sunday, 19 April 2020

ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...

இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..

ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...

யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...

வேறு யாருமில்லை.. 

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... 

வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.

சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...

அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...

""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""

இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...

சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..

நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....

அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..

அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...

 இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...

இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..
 
 இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???

ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. 
நம் சந்ததிக்கு.... .... 

From Ranga

சார்லஸ் டார்வின் காலமான தினமின்று


சார்லஸ் டார்வின் காலமான தினமின்று😓

இப்போ கூட காமெடி பட ஹீரோக்கள் கேட்கும் “கோழியிலே இருந்து முட்டை வந்துச்சா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்துச்சா? -ங்கற கேள்விக்கான பதில் இன்னிக்கும் கொஞ்சூண்டு சிக்கலானதுதான், இல்லையா?
இந்த கேள்வி இப்பயில்லே..கேள்வி அந்தக் கால விஞ்ஞானிகள் பலருக்கும் வந்துச்சி.

அதாவது மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் அப்படீங்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு வந்தது இயல்புதானே. 19-ம் நூற்றாண்டு வரைக்கும் பலருக்கும் இதுக்குத் துல்லியமான பதில் கிடைக்கல. 19-ம் நூற்றாண்டுல பிரிட்டன்ல உள்ள ஷ்ரூஸ்பரிங்கிற இடத்தைச் சேர்ந்த சார்லஸ் டார்வின்தான் இதுக்குத் திட்டவட்டமான பதிலைக் கண்டுபிடிச்சார்.

அதாவது மனிதர்கள், குரங்கு இனத்தின் வாரிசுகள். வாலில்லா குரங்குக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்று அவர் கூறினார். இதை எப்படி அவர் கண்டுபிடிச்சார்? அது ஒரு சுவாரசியமான கதை. அதிலும் குறிப்பா அவர் இளைஞனா இருந்தப்போ, பீகிள் என்கிற கப்பல்ல ஐந்து வருஷம் உலகத்தைச் சுத்தினார். அப்போ கிடைச்ச அனுபவ அறிவு, அறிவியல் அறிவுதான் அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம்.

ஆரம்பத்துல டார்வினோட அப்பா, டார்வினை டாக்டருக்குப் படிக்க அனுப்பினார். ஆனால், டார்வினுக்கு அது பிடிக்கலை, இயற்கையை ஆராய்ச்சி பண்றதுலதான் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால, டாக்டருக்குப் படிப்பை விட்டுட்டு வந்துட்டார்.டார்வின் மேல அக்கறையா இருந்த கேம்ப்ரிட்ஜ் தாவரவியல் பேராசிரியர் ஹென்ல்ஸோ, 1831-ல் டார்வினுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதுல ‘பீகிள்கிற கப்பல்ல, இயற்கை ஆராய்ச்சியாளரா போறதுக்குத் தயாரா’ன்னு அவர் கேட்டிருந்தார். ஆனா, அந்தக் கப்பல்ல போறதுக்கு எந்தச் சம்பளமும் கிடையாது. டார்வினோட அப்பா, கப்பல்ல போக ஒத்துக்கல. டார்வினோட மாமா ஜோசியா வெட்ஜ்வுட்தான், பீகிள் கப்பல்ல போறதுக்கு டார்வினோட அப்பாவ சம்மதிக்க வச்சார்.

இந்தப் பயணத்தில் தனக்குக் கிடைத்த அனைத்து உயிரினங்களையும் டார்வின் ஆராய்ந்தார். அவற்றைப் பற்றிய வர்ணனையை எழுதியும் வைத்தார். ஆரம்பத்தில் பறவைகளையும் உயிரினங்களையும் சுட்டுப் பிடிப்பதில் ஆர்வம் காட்டிய டார்வின், பின்னர் ஒவ்வொரு பகுதியையும் உற்றுநோக்குவதிலும் அப்பகுதி ஏன் அப்படி இருக்கிறது என்பதற்கான காரண, காரியத்தைத் தேடுவதிலும் செலவிட்டார்.இது அவருடைய அறிவை வளர்த்தது. கப்பல், குதிரை, நடை என்று ஒவ்வொரு பகுதியிலும் வாய்ப்பு கிடைத்த வழிகளில் எல்லாம் பயணம் செய்து இயற்கையை உற்று நோக்கினார்.

இயற்கை அறிவியல் தொடர்பாக நிறைய வாசிச்சார். அது மட்டுமில்லாமல், அவர் செஞ்ச இன்னொரு முக்கியமான விஷயம் தினசரி தனது டைரியை எழுதியதுதான். பார்த்த அனைத்து விஷயங்களையும் விட்டுவிடாமலும், விரிவாகவும் எழுதி வைத்தார்.

அவருடைய எழுத்தும் வாசிப்பும் புதிய புரிதல்களை ஏற்படுத்தின. லயல் என்பவரின் புவியியல் பற்றிய எழுதிய புத்தகம், மால்தூஸின் மக்கள்தொகை கொள்கை போன்றவற்றைப் படித்ததால்தான், பரிணாமவியல் கொள்கையை டார்வினால் உருவாக்க முடிந்தது.

காலபகஸ் தீவுகளில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு வகைகள், குறிப்பாக உண்ணும் உணவுக்கு ஏற்ப தினைக் கருவிகளின் அலகில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இயற்கைத் தேர்வு (Natural selection), உயிரினங்களின் தகவமைப்பு (Adaptation), பரிணாமவியல் கொள்கை (Evolution theory) ஆகியவற்றை டார்வின் உருவாக்கினார்.

கப்பலில் இருந்தபோதே பேராசிரியர் ஹென்ஸ்லோவுக்கு அவர் எழுதிய கடிதங்கள், கேம்பிரிட்ஜ் தத்துவச் சிந்தனையாளர்கள் பேரவையில் விநியோகிக்கப்பட்டன. டார்வினுடைய கட்டுரை, டார்வின் சேகரித்த எலும்புகள் மீது பண்டையவியல் ஆராய்ச்சி யாளர்கள் காட்டிய ஆர்வம் ஆகியவற்றின் காரணமா முன்னணி அறிவியலாளர்கள் மத்தியில் டார்வினுக்கான இடம் உறுதி செய்யப்பட்டது.

ஐந்து ஆண்டு பீகிள் கடற்பயணத்தை முடித்துக்கொண்டு டார்வின் நாடு திரும்பினப்ப, தீவிர கள ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்ட ஒரு விஞ்ஞானியா அவர் மாறியிருந்தார். தன்னுடைய கடற்பயணம் குறித்து அவர் எழுதிய ‘பீகிள் கடற்பயணம்’ என்ற அவருடைய முதல் புத்தகம் உலகப் புகழ்பெற்றது.

பரிணாமவியலின் தந்தை

இளைஞரா இருந்தாலும் அறிவியலாளர்கள் மத்தியில், தான் மதிக்கப்பட வேண்டும் என்று டார்வின் நினைத்தார். தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் ஆர்வத்துடன் தீவிரமாக உழைத்து, தன் உடலை வருத்திக்கிட்டு வேலை பார்த்தார். தனது கண்டறிதல், கொள்கைகளை ஆதாரப்பூர்வமா முன்வைச்சார்.

‘பரிணாமவியலின் தந்தை’ என்று இன்றைக்கு அவர் போற்றப்படுகிறார். ஆனால், பரிணாமவியல் கொள்கையை முதன்முதலா அவர் சொன்னப்ப, எப்படியெல்லாம் அவருக்கு எதிர்ப்பு வந்துச்சு தெரியுமா? அவர் சொன்னதை விஞ்ஞானிகள் சிலர் ஏத்துக்கிட்டாங்க. ஆனா, பழமையில் ஊறிய பல மத நம்பிக்கையாளர்கள் டார்வினை எதிரியா பார்த்தாங்க. அவரைத் தூற்றினாங்க. அவரைக் குரங்காவே வரைஞ்சு, அவமானப்படுத்த நெனைச்சாங்க.

ஆனா, டார்வின் இதைப் பத்தியெல்லாம் கவலைப்படல. தன்னுடைய கொள்கைக்கு ஆதாரம் இருக்குங்கிறபோது, இதையெல்லாம் கண்டு உணர்ச்சிவசப்பட்டுக் கருத்து சொல்லக் கூடாதுன்னு பேசாம விட்டுட்டார். அன்றிலிருந்து இன்றுவரை டார்வினோடப் பரிணாமவியல் கொள்கையைத்தான் உலகம் முழுவதும் உள்ள குழந்தைங்க, ஆராய்ச்சியாளர்கள் படிக்கிறாங்க.

அன்றைக்கு எதிர்ப்பைப் பார்த்து அவர் பேசாம ஒதுங்கியிருந்தா, அவருக்குப் பின்னாடி இன்னைக்கு உலகம் கண்டுபிடிச்சிருக்கிற பல அரிய விஷயங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும், இல்லையா...

அத்தகைய சிறப்புமிக்க ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சியாளர் சமூக ஆர்வலர் அவருடைய நினைவு தினத்தில் அவரைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஷானு @ சண்முகநாதன்
செய்தியாளர்
திருச்சி

9842455580

கொரானாவுக்கு பிறகு

.. வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும்  தயார் செய்து கொள்வது நன்று  .. *கொரானாவுக்கு பிறகு* இந்த செய்தியில்...